தினேஷ் கார்த்திக் வேண்டாம்! அவரை சேர்க்கலாம்.. ஆசிய கோப்பையில் தமிழனை புறக்கணித்த வீரர்
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பிரபல வீரர் தேர்வு செய்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 27ம் திகதி துவங்குகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி 28ம் திகதி நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விடயங்கள் பேசி வரும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா, இந்திய அணிக்கான அவரது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
mykhel
டேனிஷ் கனேரியா தனது ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவையும், சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ள டேனிஷ் கனேரியா அடுத்ததாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும், அதுவே இந்திய அணிக்கும் பயனளிக்கும் என டேனிஷ் கனேரியா தெரிவித்தார்.
கனேரியாவின் தேர்வு செய்த இந்திய அணி:
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
TOI