உலகக்கோப்பை கிரிக்கெட்! முக்கிய போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடுவது சந்தேகம்.. கசிந்த தகவல்
உலகக்கோப்பை தொடரின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது முதுகில் ஏற்பட்ட பிரச்சனை.
அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது சந்தேகமே என தகவல்.
தினேஷ் கார்த்திக் முதுகு பிடிப்பால் அவதிப்படுவதால் உலகக்கோப்பை தொடரின் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில் தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையில் நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் டைவ் அடித்த போது அவருக்கு முதுகில் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் ஆட்டத்தின் பாதியிலேயே அவர் பெவிலியனுக்கு அழைத்து செல்லப்பட்டு, ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்தார். இதனிடையில் தினேஷ் கார்த்திக்கின் முதுகுவலியின் தீவிரத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் சிகிச்சை மூலம் முழுவதும் குணமாக்க மருத்துவர்கள் முயன்று வருவதாகவும் பிசிசிஐ அதிகாரி PTI-யிடம் தெரிவித்துள்ளார்.
Twitter
மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு நல்ல ஓய்வு தேவை என தெரிகிறது. இதனால் நாளை மறுநாள் நடைபெறும் வங்கதேச அணியுடனான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது.