தினேஷ் கார்த்திக் கதவை தட்டல! தகர்த்து கெத்தா உள்ளே வந்தார்... ராகுல் திராவிட் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
37 வயதான தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார். 15-வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் வெளிப்படுத்திய அபார ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க தொடரில் அட்டகாசமாக விளையாடினார். இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் விளையாட தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், கார்த்திக்கை அணியில் தேர்வு செய்ய காரணமே அவரிடம் உள்ள அந்த தனித்திறன்தான். தினேஷ் கார்த்திக்கின் அந்த திறன் ராஜகோட் போட்டியில் எங்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. கடைசி ஐந்து ஓவர்களில் பெரிய அளவிலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.
அது மாதிரியான இன்னிங்ஸ் எல்லாம் ஒன்றே ஒன்றை தான் சொல்லும். வாய்ப்புக்காக கதவை தட்டக் கூடாது, கதவை தகர்க்க வேண்டும் என நான் எப்போதும் சொல்வேன்.
அதை அந்த இன்னிங்ஸ் மூலம் கார்த்திக் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.