மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட தினேஷ் கார்த்திக்! இந்திய அணி கேப்டனை வச்சு செஞ்ச பிரபல வீரர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கை அக்சர் படேலுக்கு முன்னதாக களமிறக்காதது ஏன் என கவுதம் கம்பீர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ருதுராஜ் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 34 (21) ரன்கள் குவித்து அந்த சரிவை சரி செய்து அவுட்டானார்.
ஆனால் அப்போது வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 5 (7) ஹர்திக் பாண்டியா 9 (12) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியை காட்டாமல் அதிக பந்துகளை சந்தித்து சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். போதாகுறைக்கு ஷ்ரேயஸ் ஐயரும் 40 (35) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானதால் 98/5 என திணறிய இந்தியா 130 ரன்களை தாண்டுமா என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிரட்டலாக பேட்டிங் செய்து 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் மாஸ் கம்பேக் கொடுத்துள்ள தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் களமிறக்கியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் பினிஷெர் என்பதால் கடைசியில்தான் களமிறங்க வேண்டுமென்ற சட்டம் உள்ளதா கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தினேஷ் கார்த்திக் போன்றவரை முன்னதாகவே களமிறக்கியிருக்க வேண்டும் என்று கேப்டன் ரிசப் பண்ட்டை விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், சில நேரங்களில் பினிஷர்கள் என அழைக்கப்படுபவர்கள் 15 ஓவர்கள் கழித்துதான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நீங்கள் (பண்ட்) நினைக்கிறீர்கள்.
தினேஷ் கார்த்திக் ஒரு அனுபவம் வாய்ந்த இந்திய வீரர். அவர் அக்சர் படேலுக்கு முன்பு களமிறங்கியிருக்க வேண்டும். அப்படி இறக்கியிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் இன்னும் அதிகரித்திருக்கும் என கூறினார்.
குறித்த போட்டியில் தினேஷ் கார்த்திக் சிக்சர்கள், பவுண்டரிகளாக கடைசி ஓவரில் பறக்கவிட்டு 30 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.