தினேஷ் கார்த்திக்கின் மிரட்டல் பேட்டிங்கிற்கு இது தான் காரணமாம்! வெளிவந்த ரகசியம்
விளையாடுவதற்கு வயது ஒன்றும் தடை கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் அசத்தும் தினேஷ் கார்த்திக்.
அவரின் கம்பேக் குறித்து பேசிய ஆர்சிபி இயக்குனர்
தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதற்கான காரணத்தை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பயிற்சியாளர் வெளியிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் அறிமுகமானார். தோனி இந்திய அணியின் ரெகுலர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இருந்ததால் தினேஷ் கார்த்திக்கால் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அணியில் இருந்து முழுவதுமாக ஓரங்கப்பட்டார்.ஆனால் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடர் இந்திய அணியின் தேர்வாளர்கள் உட்பட அனைவரது எண்ணத்தையும் மாற்றி விட்டது என்றே கூறலாம், ஏனென்றால் இந்த தொடரில் தினேஷ் கார்த்திக் மிக அதிரடியாக செயல்பட்டு ஒற்றையாளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
Twitter/Fancode
இதன்பின்னர் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். விளையாடுவதற்கு வயது ஒன்றும் தடை கிடையாது என்பதை நிரூபிக்கும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கின் இந்த கம்பேக் குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் இயக்குனர் மைக் ஹசன், தினேஷ் கார்த்திக்கின் ரீ என்ட்ரி சிறப்பான ஒன்றாகும், நாங்கள் அவருக்கு என்ன ரோல் என்று தெளிவாக வகுத்துக் கொடுத்திருந்தோம்.
இதனால் அவரால் திட்டத்தின் படி சிறப்பாக செயல்பட முடிந்தது. நாங்கள் இருவரும் எங்களுக்குள் உற்சாகத்துடன் கடின முயற்சி செய்தோம், எங்களுக்கு பினிஷர் தேவைப்பட்டது அதனை அவரிடம் புரிய வைத்து அதற்காக அவரை தயார் செய்தோம் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
mykhel