பவுண்டரி அடித்து மிரட்டிய வீரரை அசத்தலான கேட்ச் மூலம் வெளியேற்றிய தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகியுள்ளது.
டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்ற நிலையில் போட்டியானது மழை காரணமாக 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
போட்டியின் ஒரு கட்டத்தில் ஓப்பனர்கள் இருவரையும் இழந்து அயர்லாந்து அணி திணறி கொண்டிருந்தது. அப்போது ஒன் டவுனில் விளையாடி கொண்டிருந்த கரீத் டிலானி ஒரு பவுண்டரியை விளாசி அயர்லாந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தார்.
அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை, அவேஷ் கான் வீசிய பந்தை கரீத் எதிர்கொண்ட போது பந்து பேட்டில் உரசி கொண்டு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சென்றது. அதை லாவகமாக பிடித்து அவர் அசத்தினார்.
(தினேஷ் கார்த்திக் கேட்ச் பிடித்த தருணம் 4:16)