தினேஷ் கார்த்திக்கை ஓரம்கட்ட திட்டம்? கசிந்த தகவலால் கடுப்பான ரசிகர்கள்
தினேஷ் கார்த்திக்கை பிசிசிஐ ஓரம்கட்ட திட்டமிடுவதாக தகவல் கசிந்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்றதை தொடர்ந்து விக்கெட் கீப்பருக்கான இடம் இன்றுவரை யாருக்கும் நிரந்தரமாகாமல் உள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு இடையிலான நேரடி போட்டியாக இது மாறியுள்ளது.
வரும் அக்டோபரில் அவுஸ்திரேலியாவில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில், இருவரில் ஒருவர்தான் இந்திய அணிக்காக ஸ்டெம்பிற்கு பின்னால் நிற்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15ஆவது சீசனுக்கு முன்புவரை ரிஷப் பந்திற்குத்தான் அந்த இடம் கிடைக்கும் எனக் கருதப்பட்டது. காரணம், ரிஷப் பந்த் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை குவித்து, பயமில்லாமல் விளையாடி வந்ததால்தான்.
இந்நிலையில் 15ஆவது சீசனில் அவரது ஆட்டம் திருப்திகரமாக இல்லை. அதேவேளையில் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் மிரட்டியதன் காரணமாக தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
BCCI/IPL
இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடரின்போது தினேஷ் கார்த்திக் களமிறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. காரணம், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இத்தொடரில் துணைக் கேப்டனாக இருக்கிறார். இதனால், அவர் அனைத்து போட்டிகளிலும் களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
மேலும் இஷான் கிஷன், கே.எல்.ராகுல் ஆகிய இரண்டு கீப்பர்களும் இருக்கிறார்கள். இதனால், இத்தொடரில் தினேஷ் கார்த்திக் 4ஆவது ஆஃப்சனாக மட்டுமே இருப்பார். ருதுராஜைப் போல: ருதுராஜ் கெய்க்வாட்டை இப்படிதான் தொடர்ந்து அணியில் சேர்த்துவிட்டு, லெவன் அணியில் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தார்கள். இதனால், பார்ம் அவுட் ஆனார்.
தினேஷ் கார்த்திக்கிற்கும் இதேபோல நிலைமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, இது பிசிசிஐ தினேஷ் கார்த்திகுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
AP