முதல் பந்திலேயே அவுட் ஆன தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்! கடுமையாக விளாசும் ரசிகர்கள்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தால் ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.
தினேஷ் கார்த்திக் டக் அவுட்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் RCB மற்றும் DD அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக கோலி 50 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால், நடப்பு தொடரில் சொதப்பி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்தப் போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
BCCI/IPL
மோசமான சாதனை
அவர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் லலித் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்மூலம் ஐபிஎல்லில் அதிகமுறை டக் அவுட் ஆன மன்தீப் சிங்குடன் அவர் மோசமான சாதனையில் இணைந்தார்.
தினேஷ் கார்த்திக் நடப்பு தொடரில் நான்கு போட்டிகளில் 0, 9, 1, 0 என ஒற்றை இலக்க ஓட்டங்களில் அவுட் ஆகியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விளாசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
After a dream IPL 2022 season, not a great start for Dinesh Karthik this season.
— CricTracker (@Cricketracker) April 15, 2023
?: IPL pic.twitter.com/4tnaMMBl1J