கேக் வெட்டி கொண்டாடிய தினேஷ் கார்த்திக்! ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அஸ்வின்.. வைரல் வீடியோ
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
ரோகித் சர்மா தலைமையிலான அணி வீரர்கள் மும்பையில் இருந்து கிளம்பி அவுஸ்திரேலியா சென்றனர். கிளம்புவதற்கு முன்னர் அஸ்வின், டிராவிட், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட வீரர்கள் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தனர்.
பின்னர் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் தினேஷ் தினேஷ் கார்த்திக் மொத்த குழு சார்பாக கேக் வெட்டினார். அது சாதாரண கேக் அல்ல, டி20 உலகக்கோப்பை லோகோ கேக்கின் மீது பொறிக்கப்பட்டிருந்தது.
Smiles, laughter and wishes as #TeamIndia left from Mumbai for Australia ?? pic.twitter.com/Re60cUgnZx
— BCCI (@BCCI) October 7, 2022
கேப்டன் ரோஹித் ஷர்மாவும் கார்த்திக் உடன் நின்றார். இருவரும் ஒருவருக்கொருவர் கேக் துண்டுகளை ஊட்டுவதை காண முடிந்தது.
வெள்ளிக்கிழமை காலையில் பெர்த்திற்கு இந்திய அணி வீரர்கள் வந்து சேர்ந்தனர்.
அவர்கள் மேற்கு அவுஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதன் மூலம் உலகக் கோப்பைக்குத் தயாராகிறார்கள்.