பிரித்தானியாவுக்கு பறந்து சென்று தினேஷ் கார்த்திக் தந்த சர்ப்ரைஸ்! ஒரே வார்த்தையில் ஓகேவான காதல்
பிரித்தானியாவுக்கு பறந்து சென்று தீபிகாவை பார்த்த தினேஷ் கார்த்திக்
2015ல் நடைபெற்ற தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் திருமணம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக்கும், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலுக்கும் கடந்த 2015 ஆகஸ்ட் 18ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
சமீபத்தில் இருவரும் தங்களின் 7ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள்.
தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் காதல் கதை
தினேஷ் கார்த்திகும், தீபிகாவும் கடந்த 2012ல் உடற்பயிற்சி கூடத்தில் தான் முதன் முதலில் சந்தித்து கொண்டனர். இருவருக்கும் உடற்பயிற்சி கொடுத்தது ஒரே பயிற்சியாளர் தான்.
weddingsutra
அப்போது முதல் இருவரும் நட்பானார்கள். அதற்கு அடுத்த ஆண்டான 2013ல் தீபிகா தனது விளையாட்டு பயிற்சிக்காக பிரித்தானியா சென்றார். இதையடுத்து விமானத்தில் பிரித்தானியாவுக்கு பறந்து சென்று தீபிகாவை சந்தித்து சர்ப்பரைஸ் கொடுத்தார் தினேஷ் கார்த்திக்.
இது தீபிகாவை மிகவும் ஈர்த்தது, இங்கு தான் இவர்களின் காதல் கதை தொடங்கியது. அதே ஆண்டில் தினேஷ் கார்த்திக் தனது காதலை, தீபிகாவிடம் வெளிப்படுத்த அவரும் உடனே ஏற்று கொண்டார்.
k00019 Instagram Photo
இதன்பின்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் ஆனது. ஆனால், இருவரும் தத்தம் விளையாட்டில் மும்முரமாக இருந்ததால் அவர்களது திருமணம் 2 ஆண்டுகள் பின்னரே 2015ல் நடைபெற்றது.
தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதிக்கு கடந்தாண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
k00019 Instagram Photo