காதலை அழகாய் வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் மற்றும் மனைவி! வைரலாகும் பதிவு
டுவிட்டரில் ஒரு ”வார்த்தை ட்விட்” என்ற ஹேஷ் டேக் டிரண்டான நிலையில் அதன் மூலம் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் தம்பதி தங்கள் காதலை அழகாக வெளிப்படுத்தினார்கள்.
உலகளவில் உள்ள சமூகவலைதளங்களில் முன்னணியில் உள்ளது டுவிட்டர். இதில் அடிக்கடி எதாவது ஒரு ஹேஷ் டேக் உலகளவில் டிரண்டாகும், அந்த டேக்குக்கு சம்மந்தமான பதிவுகளை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பதிவிடுவார்கள்.
அந்த வகையில் #OneWordTweet (ஒரு வார்த்தை ட்விட்) என்ற ஹேஷ் டேக் நேற்று டிரண்டானது. அதன்படி தங்களுக்கு பிடித்த விடயத்தை அல்லது எதிர்பார்க்கும் விடயத்தை ஒரு வார்த்தையில் எல்லாரும் டுவிட்டாக பதிவு போட வேண்டும்.
Dipika
— DK (@DineshKarthik) September 2, 2022
இதில் பல உலக தலைவர்களும் பதிவுகளை போட்டனர். அந்த வகையில் நட்சத்திர ஜோடியான தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் ஜோடியும் டுவிட் போட்டனர்.
அதன்படி தினேஷ் கார்த்திக், “Dipika” என தனது மனைவியின் பெயரை காதலையும், அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் டுவிட்டாக பதிவிட்டார்.
அதே போல தீபிகா தனது டுவிட்டர் பக்கத்தில், “Dinesh” என பதிவிட்டு கணவர் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தினார்.
Dinesh
— Dipika Pallikal (@DipikaPallikal) September 2, 2022