ஓடாமல் நின்ற தினேஷ் கார்த்திக்! அவரிடம் ஓடி வந்த எதிரில் நின்ற பேட்ஸ்மேன்.. ரன் அவுட்டில் தப்பிய வீடியோ
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் ரன் அவுட்டில் இருந்து தப்பித்த திக் திக் வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பங்கேற்று விளையாடின. இப்போட்டியின் ஒரு கட்டத்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை பினிஷ் செய்ய காத்திருந்த நிலையில் எதிர் திசையில் ரூதர்போர்ட், ஹசரங்கா இருவரும் சவுதி ஓவரில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
இதனால் ஆட்டம் கையைவிட்டு போகும் நிலை இருந்தது. 19வது ஓவரை வீச ஆள் இல்லாத நிலையில்தான் வெங்கடேஷ் ஐயர் திடீரென பவுலிங் போட வந்தார். அந்த ஓவரில் முதல் பாலில் ஹர்ஷல் பட்டேல் சிங்கிள் அடிக்க அடுத்த பாலில் தினேஷ் கார்த்திக் பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் அடித்தார்.
#DK survives! pic.twitter.com/QmgA2ttvdR
— Sports Hustle (@SportsHustle3) March 30, 2022
பொதுவாக பேக்வேர்ட் பாயிண்ட் திசைகளில் அடிக்கும் பந்துகளை பேட்ஸ்மேன்கள் பார்க்க மாட்டார்கள். எதிரே இருக்கும் நான் ஸ்டிரைக்கர் ஓடும்படி அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓடுவார்கள்.
ஆனால் நேற்று தினேஷ் கார்த்திக் ஹர்ஷல் பட்டேல் அழைத்தும் ஓடாமல் நின்றார். ஆனால் ஹர்ஷல் பட்டேல் ஓடி ஸ்டிரைக்கர் திசைக்கு வந்துவிட்டார். இதையடுத்து தவறை உணர்ந்த தினேஷ் கார்த்திக் வேகமாக ஓடி நான் ஸ்டிரைக்கர் திசைக்கு சென்றார்.
நல்லவேளை அவர் அவுட்டாகவில்லை. இதையடுத்து தவறை உணர்ந்த தினேஷ் கார்த்திக், சீனியர் என்று நினைக்காமல், இளம் வீரர் ஹர்ஷல் பட்டேலிடம் சென்று மன்னிப்பும் கேட்டார்.