டி20 உலகக்கோப்பையில் இவங்க தான் பேட்டிங்கில் அடிச்சு துவம்சம் பண்ண போறாங்க! தமிழன் தினேஷ் கார்த்திக் கணிப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாச போகும் வீரர்கள் குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கணித்து கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதன் போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.
டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் திகதி துவங்கி, நவம்பர் 14ஆம் திகதி நிறைவடையும்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை குவிக்கக்கூடிய திறன் யாருக்கு உள்ளது என தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அவர் கூறுகையில், இந்திய அணியின் ரோகித் சர்மா அல்லது அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இருவரில் ஒருவர்தான், டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது.
இரண்டு பேரும் ஓப்பனிங் வீரர்கள் என்பதால் நிலைத்து நின்று விளையாடக் கூடியவர்கள். ரோகித் சர்மாவை பொறுத்தவரை, உலகக்கோப்பை தொடரில் எப்படி செயல்படுவார் என்பது அனைவருக்குமே தெரியும்.
உலகக் கோப்பை தொடர், ரோஹித் சர்மா இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது. உலகக் கோப்பை தொடரில் ரோஹித் ரன்மழை பொழியக் கூடியவர் என கூறியுள்ளார்.