கனவு நிறைவேறிவிட்டது! உலகக் கோப்பையில் இடம்பிடித்தது குறித்து தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி
37 வயதாகும் தினேஷ் கார்த்திக் 50 டி20 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 592 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளிலும், 94 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததன் மூலம் கனவு நிறைவேறிவிட்டதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கனவு காணுங்கள், அது உண்மையாகும்' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
BCCI
முன்னதாக அவர், நாட்டிற்காக விளையாடுவதே பெரிய நோக்கமாக இருந்தது. உலகக் கோப்பை நெருங்கி வருவதை நான் அறிவேன். நான் அந்த உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன், மேலும் இந்தியா எல்லையை கடக்க உதவ விரும்புகிறேன் என கூறியிருந்தார்.