ஒவரின் ஆறு பந்துகளையும் சிக்சர்கள், பவுண்டரிகளாக நொறுக்கிய தினேஷ் கார்த்திக்! மிரண்டு நின்ற பவுலர்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசி கெத்து காட்டியுள்ளார் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்.
இப்போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முக்கியமாக தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் தான் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
அவர் 34 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களும் அடக்கம். அதிலும் டெல்லி அணி பந்துவீச்சாளர் முஸ்தவிசுர் ரகுமானின் ஒரே ஓவரில் 4,4,4,6,6,4 என 28 ரன்களை குவித்து வியக்க வைத்தார்.
அவரின் இந்த அதிரடி ஆட்டத்தால் ரகுமான் நிலைகுலைந்து போனார் என்று தான் சொல்ல வேண்டும்.
அட்டகாசமான பார்மில் உள்ள தினேஷ் கார்த்தின் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ரன்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.