டி20 உலகக் கோப்பைக்கான அணிக்கு பும்ராவை தவிர்த்து ஒட்டுமொத்த இந்திய வீரர்களையும் ஓரங்கட்டிய தினேஷ் கார்த்திக்!
2021 டி20 உலகக் கோப்பைக்கான தனது அணியை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ளார்.
சூப்பர் 12 சுற்று முடிவிகளின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் அவரது அணியை தேர்வு செய்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் 2021 டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பிளேயிஙக் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்:
- பாபர் அசாம்(பாகிஸ்தான்) (கேப்டன்)
- ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து)
- சரித் அசலங்கா(இலங்கை)
- Rassie van der Dussen(தென் ஆப்பிரிக்கா)
- ஷாகிப் அல் ஹசன்(வங்க தேசம்)
- மொயின் அலி(இங்கிலாந்து)
- வனிந்து ஹசரங்கா(இலங்கை)
- ஜம்பா(ஆஸ்திரேலியா)
- போல்ட்(நியூசிலாந்து)
- பும்ரா(இந்தியா)
- ஷஹீன் அப்ரிடி(பாகிஸ்தான்)
தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த அணியில் பும்ரா தவிர வேறு எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை பொறுத்தவரை மோர்கன் சிறந்த கேப்டன் தான், ஆனால் அவர் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படவில்லை. எனவே நான் பாபரை அசாமை தேர்வு செய்தேன் என தினேஷ் கார்த்திக் கூறினார்.
மேலும், Rassie van der Dussen மிகவும் புத்திசாலித்தனமான பேட்டிஸ்மேன் என கூறினார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். எனவே, நான் 7 சரியான பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.