எட்டி பார்த்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்! புகைப்படம் வெளியிட்டு கிண்டலடித்த தினேஷ் கார்த்திக்
இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தனது சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வேடிக்கையான ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்து தொடரை முழுவதுமாக கைப்பற்றியது. இதையடுத்து டி20 தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் சக வீரர்கள் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வினுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
In the stands with some legends ?
— DK (@DineshKarthik) July 27, 2022
P.S. Not often you're photobombed by the one and only Rahul Dravid ? pic.twitter.com/xuDyZDWsxV
அதில் பாண்டியாவுடன் எடுத்த புகைப்படத்தின் பின்புறம் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எட்டி பார்க்கிறார். இதற்கு வேடிக்கையான ரியாக்ஷன் கொடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
அவரின் பதிவில், சில ஜாம்பவான்களுடன் இருக்கிறேன், ராகுல் டிராவிட்டை இப்படி புகைப்படத்தில் photobombed ஆவதை அடிக்கடி பார்க்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
photobombed என்பது ஒருவர் புகைப்படம் எடுக்கும் போது எங்கிருந்தோ ஒளிந்து கொண்டு அந்த புகைப்படத்தில் தானும் இடம்பெறுவதை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.