மோசமான ஃபார்மில் திணறும் கோலி! தோள் கொடுத்த தமிழன் தினேஷ் கார்த்திக்
கோலி மோசமான ஃபார்மில் விளையாடி வரும் சூழலில் அவருக்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இருந்தாலும் இது ஓய்வா அல்லது அவர் அணியில் இருந்து டிராப் செய்யப்பட்டுள்ளாரா என்ற விவாதம் இப்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது, ஒரு சாரார் கோலியை ஊக்கப்படுத்துவது போல பேசினாலும், மற்றொரு சாரார் அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர். முக்கியமாக பல பிரபல வீரர்கள் அவரின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோலிக்கு ஆதரவாக பேசி உள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலி உடன் இணைந்து விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Getty
தினேஷ் கார்த்திக் கூறுகையில், கடந்த காலங்களில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ரன் குவிப்பதை அனுபவித்த வீரர். இப்போது அவருக்கு சிறந்த ஓய்வு கிடைத்துள்ளது. நிச்சயம் இதன் மூலம் தன்னை ரீசார்ஜ் செய்து கொண்டு, அவர் கம்பேக் கொடுப்பார்.
மீண்டும் சிறப்பாக களத்தில் அவர் செயல்படுவார் என நம்புகிறேன். கோலி மாதிரியான தலைசிறந்த வீரர்களை ஒரு போதும் நிராகரித்து விட முடியாது. இது மாதிரியான சூழ்நிலைகளை கடந்து வருவது எளிதல்ல. எனது திறமையை நிரூபித்த காரணத்தினால்தான் என்னால் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முடிந்தது என கூறியுள்ளார்.