துரோகம் செய்த மனைவிகள்: சாதித்துக் காட்டிய 2 கிரிக்கெட் வீரர்கள்
மனைவிகள் துரோகம் செய்தும் கூட கிரிக்கெட் விளையாட்டில் மாபெரும் சாதனைப் படைத்த 2 கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாதித்த 2 கிரிக்கெட் வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டு விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் நிகிதா என்ற மனைவியை திருமணம் செய்து கொண்டார்.
தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக விளையாடும்போதெல்லாம் நிகிதாவும் வருவார். அப்போது, கிரிக்கெட் அணியில் இருந்த முரளி விஜய்க்கும், நிகிதாவிற்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து, தினேஷ் கார்த்திக்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிகிதா தற்போது முரளி விஜய்யுடன் வசித்து வருகிறார்.
ஆனால், இந்த சம்பவத்திலிருந்து துவண்டு விடாமல் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் விளையாட்டில் சாதனைப் படைத்துள்ளார். மேலும், தினேஷ் கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இதேபோல், இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷான். இவர் நிலங்கா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக தில்சானை விட்டு பிரிந்த நிலங்கா, உபுல் தாரங்காவை திருமணம் செய்து கொண்டார். இச்சம்பவத்தால் தில்ஷான் வேதனைப்பட்டாலும், இலங்கை அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி பல சாதனைகளை படைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |