அவருக்கு பதிலாக இந்த வீரரை களமிறக்குங்கள்! தினேஷ் கார்த்திக் அதிருப்தி
ஜித்தேஷ் சர்மா 6வது வரிசை வீரர் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ள நிலையில் தீபக் ஹூடாவை 3வது வரிசையில் களமிறக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தீப் ஹூடா
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடி வரும் நிலையில் முதலாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது. இந்திய டி20 அணியில் தோனியின் ஓய்வுக்கு பின்னர் 6வது வரிசையில் ஒரு சிறந்த பினிஷர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது.
அந்த இடத்தில் ஆட தீபக் ஹூடாவை இந்திய அணி பயிற்சி செய்து வருகிறது. ஆனால் அவர் அதிரடி காட்ட வேண்டிய நேரத்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்கிறார்.
இது குறித்து பேசிய தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், 5,6 இடத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினமான விஷயம். தீபக் ஹூடா 3வது வரிசையில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Getty Images
ஜித்தேஷ் சர்மாவை இறக்கனும்
ஆனால், அதே ஆட்டத்தை அவரால் 6 மற்றும் 7வது வரிசையில் வெளிப்படுத்த முடியவில்லை. அதே நேரம் ஜித்தேஷ் சர்மா 6வது வரிசை வீரர். அவர் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறார்.
எனவே அவரால் அங்கு பேட்டிங் ஆட முடியும். அவர் அந்த இடத்தில் ஏற்கனவே பேட்டிங் செய்துள்ளார், ஆனால் இந்த தொடரில் அவர் ஆடுவதை நான் பார்க்கவில்லை.
தீபக்கை நீக்குவதற்கு முன்னர் அவருக்கு 3வது வரிசையில் பேட்டிங் ஆட வாய்ப்பு வழங்கலாம் என கூறினார்.