கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் வெறித்தனம்! சிக்சர்கள், பவுண்டரிகளாக பறக்கவிட்ட வீடியோ
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியின் கடைசி ஓவரின் வெறித்தனம் காட்டிய தினேஷ் கார்த்திக் வீடியோ வெளியாகியுள்ளது.
இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்தது.
ஆட்டத்தின் 14வது ஓவரின் போது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களம் கண்டார். முதல் 16 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார்.
Last 5 balls faced by #DineshKarthik
— Chaitanya ˢˢ ᵀʰᵃᵐᵃⁿ (@chaitutarak9999) June 12, 2022
4,4,6,6,1 pic.twitter.com/KpV0TfYDlY
அதன்படி கடைசி 5 பந்தில் மட்டும் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என மொத்தம் 21 ரன்களை அவர் எடுத்தார்.
இறுதிவரை அவுட்டாகாமல் இருந்த தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் மொத்தமாக 30 ரன்கள் எடுத்தார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.