இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கு இடமா? பண்ட்டுக்கு இடமா? மெளனம் கலைத்த ரோகித் சர்மா
இந்திய அணியில் இடம்பெற தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இடையே தொடரும் போட்டி.
அது தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்ட ரோகித் சர்மா.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாருக்கு இடம் என்ற கேள்வி தொடரும் நிலையில் அது தொடர்பில் கேப்டன் ரோகித் சர்மா முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோதவுள்ளது.
இந்திய அணியில் உள்ள பெரும் குழப்பம் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் தான். அவுஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் மீது முழு நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா, ரிஷப் பண்ட்-ஐ வெளியில் உட்கார வைத்தார். எனினும் தினேஷுக்கு பெரியளவில் பேட்டிங் வாய்ப்புகள் அமையவில்லை.
zeenews
அதே நேரத்தில் இரண்டாவது போட்டியில் இரண்டே பந்துகளில் 10 ரன்கள் குவித்து இந்திய அணியை தினேஷ் கார்த்திக் வெற்றி பெற செய்தார். இது குறித்து பேசிய ரோகித் சர்மா, என்னைப்பொறுத்தவரை டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் - பண்ட் இருவருமே நிறைய போட்டிகளில் ஆடி தயாராக வேண்டும். குறிப்பாக தினேஷ் கார்த்திக் தயாராக போட்டிகள் தேவை.
ஏனென்றால் அவருக்கு ஒரு சில பந்துகளே ஆடுவதற்கு கிடைக்கிறது. தென்னாப்பிரிக்க தொடரில் என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை. தென்னாப்ப்ரிக்காவின் பவுலிங் லைன் அப்பை பார்ப்போம்.
அவர்களின் பவுலிங்கை பொறுத்து தான் பேட்டிங் வரிசையை முடிவு செய்வோம். அவர்கள் இருவரின் விஷயங்களில் மிகவும் யோசித்து தான் முடிவெடுக்கிறோம்.
அவுஸ்திரேலிய தொடரில் ஆடிய பேட்டிங் ஆர்டரையே பின்பற்றவேண்டும் என்பதுதான் என் எண்ணம் என்றார் ரோஹித். அதன்படி பார்த்தால் தினேஷ் கார்த்திக்கிற்கான வாய்ப்புதான் அதிகம் என தெரிகிறது.
AP