தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல்
இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவது தொடர்பில் தினேஷ் கார்த்தி, ரிஷப் பண்ட் இடையே தொடரும் போட்டி.
இந்த விடயம் தொடர்பில் பிசிசிஐ முக்கிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆசியக்கோப்பை தொடரில் இந்தியாவின் ப்ளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது தொடர்பாக பிசிசிஐ முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி அமீரகத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய கிரிக்கெட் அணியின் ப்ளேயிங் லெவன் தொடர்பில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
அணியில் ரோஹத் ஷர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா போன்ற மிகவும் பலமிக்க பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அந்த 7 பேட்ஸ்மேன்களையும் ஒரே பிளேயிங் லெவனில் அடக்குவதுதான் தலைவலியான விடயம்.
mykhel
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவர் கேலரியில் அமர்ந்தே ஆக வேண்டும். அதாவது பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க ரிஷப், தினேஷ் கார்த்திக் இடையே பலத்த போட்டி இருக்கிறது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் ஆசியக் கோப்பையில் தினேஷ் கார்த்திகிற்கு மாற்றாக ரிஷப்பிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பிசிசிஐ தேர்வுக்குழு, கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதோடு ரிஷப் இடது கை பேட்டர் என்பதும் அவருக்கு சாதகமான விஷயமாக அமைந்துவிட்டதாகவும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.