கிரீஸுக்குள் பாய்ந்த தினேஷ் கார்த்திக்! ஸ்டெம்பை தெறிக்கவிட்டு ரன் அவுட் செய்த பட்லர் வீடியோ
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் ரன் அவுட் ஆன வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்களில் விளையாடி கொண்டிருந்தார்.
உடன் விளையாடி கொண்டிருந்த ஜடேஜா லியம் பந்தை பவுண்டரி நோக்கி அடிக்க இரண்டு வீரர்களும் ஓடி ரன்களை சேர்த்து கொண்டிருந்தனர்.
Brilliant Buttler runs out Diving DK#INDvENG pic.twitter.com/cjkZhw1Ku6
— Renin Wilben (@reninwilben) July 9, 2022
அப்போது மூன்றாவது ரன் எடுக்க ஜடேஜாவும், தினேஷ் கார்த்திக்கும் ஓடிய நிலையில் பீல்டிங் செய்த ஹாரி ப்ரூக் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் பட்லரிடம் வீசினார்.
அந்த தருணத்தில் கிரீஸுக்குள் தினேஷ் கார்த்திக் பாய்ந்து வர முயன்ற நிலையில் நூலிழையில் பட்லர் ரன் அவுட் செய்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.