ஷாபாஸ் அகமதை நம்பி ஓடி ரன் அவுட் ஆன தினேஷ் கார்த்திக்! ஏன் இப்படி செஞ்ச என ஆதங்கப்பட்ட வீடியோ
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக்கை ரன் அவுட்டாக்கி வெளியேற்றினார் சஹால்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டியின் ஒரு கட்டத்தில் ஷாபாஸ் அகமதும், தினேஷ் கார்த்திக்கும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஷபஸ் அடித்த பந்து பீல்டரிடம் சென்றது. அப்போது ஒரு ரன் எடுக்க அவர் ஓடியதை பார்த்த எதிர்முனையில் இருந்த தினேஷ் கார்த்திகும் ஓடினார்.
— Peep (@Peep_at_me) April 26, 2022
ஆனால் திடீரென முடிவை மாற்றிய ஷாபாஸ் அப்படியே நின்றுவிட்டார். அந்த தருணத்தில் பீல்டர் பந்தை பந்துவீச்சாளர் சஹாலிடம் போட அவர் முதலில் பந்தை கோட்டை விட்டு எப்படியோ ஸ்டெம்பில் அடித்து தினேஷ் கார்த்திக்கை ரன் அவுட் செய்தார்.
இதையடுத்து ஏன் இப்படி செய்தாய் என கேட்பது போல ஷாபாஸை பார்த்து அதிருப்தியுடன் கைகாட்டியபடி தினேஷ் கார்த்திக் பெவிலியன் திரும்பினார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.