இது சிக்கலான வேலைதான், ஆனால்.. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்!
இறுதிக்கட்டத்தில் துடுப்பாட்டம் செய்வது சிக்கலான வேலைதான் என தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்திய அணி டிரினிடாட்டில் நடந்த டி20 போட்டியில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ஓட்டங்கள் விளாசி, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
அவர் தனது துடுப்பாட்டம் குறித்து கூறுகையில், 'ஆடுகளம் முதலில் துடுப்பாட்டம் செய்ய கடினமாக இருந்தது. ஷாட்களை ஆடுவது சிரமம் தான். Finisher role-யை பொறுத்தவரை, முதலில் ஆடுகளத்தில் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் அதற்கு ஏற்றார் போல் எந்த ஷாட்களை ஆடினால் சரியானதாக இருக்கும் என்று யோசித்து ஆட வேண்டும்.
PC: Getty Images
இறுதிக்கட்டத்தில் (Finisher role) இறங்கி ஆடுவதை enjoy செய்கிறேன். ஆனால் இது கொஞ்சம் சிக்கலான வேலை. உங்களால் எல்லா போட்டிகளிலும் ஓட்டங்களை குவிக்க இயலாது.
சில சமயங்களில் அதிரடியாக ஆட முயற்சித்து விக்கெட்டை இழக்க நேரிடும். இதனால் உங்களால் தொடர்ந்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு ஏராளமாக கிடைத்துள்ளது. சிறிய திட்டங்கள் எல்லாம் சிறிய அளவிலான பயிற்சியில் இருந்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.
PC: AFP