அவங்க இல்லைனா என்ன? நான் ரெடி! இந்திய அணிக்கு மறைமுகமாக சிக்னல் கொடுத்த தினேஷ் கார்த்திக்: வைரலாகும் புகைப்படம்
இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக், தான் இந்திய அணிக்கு விளையாட தான் ரெடியாக இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்ற இந்திய அணி, அப்படியே அங்கு தங்கி, இங்கிலாந்து அணியுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரி விளையாடவுள்ளது.
இந்த தொடர் நடைபெற இன்னும் நீண்ட நாட்கள் உள்ளது என்பதால், இந்திய வீரர்கள் வெளியே சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன் படி வெளியே சென்று திரும்பிய பாண்ட் மற்றும் சஹா என இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால், அணிக்கு விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
? #justsaying pic.twitter.com/zX3ValErDc
— DK (@DineshKarthik) July 15, 2021
இந்நிலையில், இங்கிலாந்திற்கு வர்ணனையாளராக சென்றிருக்கும் தினேஷ் கார்த்திக், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கிரிக்கெட் கிட்டை புகைப்படமாக பதிவிட்டு ஜஸ்ட் சேயிங் என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது இதற்கு அர்த்தம், தற்போது இங்கிலாந்தில் வர்ணனையாளராக இருக்கும் தினேஷ் கார்த்திக் அவருடனேயே கிட் பேக்கையும் வைத்துள்ளதால் சொன்னால் போதும் இந்திய அணியில் தான் இணைய தயார் என்பது போல அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது,