சில சமயம் மக்கள் நம்புவதில்லை ஆனால்.. ஐபிஎல்-யில் மிரட்டும் தினேஷ் கார்த்திக்!
தனது நாட்டிற்காக சிறப்பாக எதையாவது செய்வதே தன் இலக்கு என பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி வீரர் தினேஷ் கார்த்திக் நடப்பு ஐபிஎல் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் டிவில்லியர்ஸ் இல்லாத குறையை அவர் தீர்த்து வைத்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வீரர் தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசி அதகளம் செய்தார். அதிலும் குறிப்பாக முஸ்தவிசுர் ரகுமானின் ஓவரில் சிக்ஸர்,பவுண்டரிகள் என 28 ஓட்டங்களை எடுத்து மிரள வைத்தார்.
இந்நிலையில் தனது இலக்கு மிகப்பெரியது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'நான் மிக மிக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். சில சமயம் மக்கள் நம்பிக்கை வைப்பதில்லை, ஆனால் நாட்டிற்காக சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு.
இந்த பயணம் அதன் ஒரு பகுதி தான். மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற எல்லாவற்றிலும் நான் முயன்று கொண்டிருக்கிறேன். அந்த திசையில் இது வெறும் ஒரு படி தான்' என தெரிவித்துள்ளார்.