அடுத்த ஆண்டு வலுவாக திரும்பி வருவோம்: தினேஷ் கார்த்திக்கின் பதிவு
எங்களுக்கு ஆதரவு அளித்த ஒவ்வொரு ரசிகருக்கு நன்றி எனவும், அடுத்த ஆண்டு வலுவாக திரும்பி வருவோம் எனவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நேற்று நடந்த குவாலிபையர் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அடுத்த ஆண்டு வலுவாக திரும்பி வருவோம் என ட்வீட் செய்துள்ளார்.
Photo Credit: Twitter
அவரது டிவீட்டில், 'இந்த இரவு நாங்கள் நினைத்த முடிவு கிடைக்கவில்லை, ஆனாலும் எங்கள் அணியை நினைத்து பெருமைகொள்கிறேன். இந்த பயணமும், பயமில்லாமல் நாங்கள் விளையாடியதும் கிரிக்கெட் பிராண்டாக அமையும். எங்களுக்கு ஆதரவு அளித்த ஒவ்வொரு ரசிகருக்கு இதயப்பூர்வமான நன்றிகள். அடுத்த ஆண்டு வலுவாக திரும்பி வருவோம்' என தெரிவித்துள்ளார்.
Didn't get the result we wanted tonight but proud of this team, the journey and the fearless brand of cricket we've played! Thanks to each and every fan for their support ❤️
— DK (@DineshKarthik) May 27, 2022
We'll be back stronger next year! pic.twitter.com/4dPeYHfyOv
ஐபிஎல்லின் இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 330 ஓட்டங்கள் குவித்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் அவர் 6 ஓட்டங்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.