அஸ்வின் வீசிய Free hit பந்தில் இமாலய சிக்சரை பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக்! வைரலாகும் வீடியோ
ஐபிஎல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ப்ரீ ஹிட் பந்தை தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு விளாசிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது தினேஷ் கார்த்திக் தான். அவர் 23 பந்துகளில் அதிரடியாக 44 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் பெங்களூர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
Keep Calm and chill beacuse Nagin Killler DK Popa is there to save RCB. Dinesh Karthik won it single handedly for RCB. #RCBvsRR #RCBvRR #RRvRCB #IPL2022 #RRvsRCB pic.twitter.com/qeKQ31t1HE
— Mohit Pandey (@mohitherapy) April 5, 2022
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நேற்று ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் மற்றொரு தமிழக வீரரான அஸ்வின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அதிலும் அஸ்வின் நோ பால் வீசியதன் காரணமாக 13.3 வது ஓவரில் தினேஷ் கார்த்திக்குக்கு ப்ரீ ஹிட் கிடைத்தது.
அந்த ப்ரீ ஹிட் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட தினேஷ் கார்த்திக், அஸ்வின் தனது தலையை அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு ஒரு பெரிய சிக்சரை பறக்கவிட்டார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.