தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகமே! விவரிக்கும் பிரபல வீரர்
* தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஆடும் லெவனில் இடம்பெறுவது சந்தேகமே என ஆகாஷ் சோப்ரா கூறினார்.
* 37 வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து ஆடி வருகிறார் தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய 37 வயதான தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை அவர் வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தினேஷ் கார்த்திக் T20 உலகக் கோப்பை 2022 அணியில் இடம்பெறலாம்.
trendin24news
ஆனால் ஆடும் லெவனில் அவர் இடம்பெறுவது சந்தேகமே. தினேஷ் கார்த்திக் ஒரு ஃபினிஷர் என்று அனைவரும் முடிவு செய்துவிட்டனர். அவர் சிறப்பாக செயல்படுவதாக பலரும் உணர்கிறார்கள்.
ஆனாலும் அவர் ஆடும் லெவனில் வருவார் என்பதை 100% உறுதியாக சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
Twitter