உள்ள போடு...அவனுக்கு ஒன்னுமே தெரியல! நேற்று தமிழில் வருணுக்கு டிப்ஸ் கொடுத்த தினேஷ் கார்த்திக்
டெல்லி அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி வீரர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிக் கொண்டிருப்பது குறித்து, ஆங்கிலத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்த ஹர்ஷா போக்லே அதை குறிப்பிட்டு சொல்லி காட்டினார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய குவாலிபயர் 2-வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நாளை இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதவுள்ளது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், அந்தணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண்சக்ரவர்த்தி பந்து வீசும் போது தமிழில் பேசினார்.
டெல்லி அணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 15-வது ஓவரை வருண்சக்ரவர்த்தி வீசினார். அப்போது அவர், நீ எப்படி போடுவேனுக்கு அவனுக்கு தெரியல, நீ நல்லா போடுற, அப்படியே போடு, உள்ளே போடு என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து 17-வது ஓவர் வருண் சக்ரவர்த்தி வீசும் போதும், ஏதோ ஒரு யோசனையில் இருக்கிறான். இவன் கடைசி போட்டியிலும் இப்படி தான் அவுட் ஆகியிருக்கான் என்று கூறினார்.
அப்போது ஆங்கிலத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்த, ஹர்ஷா போக்லா தினேஷ் கார்த்திக் பேசுவதை கேட்டு. இது ஆங்கில வர்ணனை சேனல் தான், ஆனால் உங்களுக்கு தமிழ் கேட்கலாம். மைதானத்தில் இருக்கும் தினேஷ் கார்த்திக் தான் தமிழில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
மேலும், தினேஷ் கார்த்திக் இப்படி தமிழில் பேசிக் கொண்டிருப்பதை ஹர்ஷா போக்லே தொடர்ந்து ரசித்துக் கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.