என் அம்மா சொன்னதை கேட்காமல் அப்பா சொன்னதை கேட்டேன்! இப்போ... ஐபிஎல் ஏலம் குறித்து கிண்டலாக பேசிய தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் ஏலம் குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நகைச்சுவையாக ஒரு விடயத்தை தெரிவித்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி சிறிய அளவிலான ஏலம், நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 292 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. யாருமே எதிர்பார்க்காத வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கும், அவுஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சன் ரூ.14 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கைல் ஜேமீசன் 15 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ரிலே மெரிடித் 8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளது தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள், நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், எனது அம்மா என்னை வேகப்பந்து வீச்சாளராக ஆகுமாறு கூறினார். நான் எனது தந்தை சொல்வதைக் கேட்டேன். எனது அம்மாவிற்கு ஒரு பார்வை இருந்தது. அது சரியானது, இல்லையா?" என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதேபோல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ், எனது காதலி சாரா என்னிடம், நீ ஏன் பந்து வீச்சாளராகவில்லை எனக் கேட்கிறார் என கூறியுள்ளார்.