அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி! சக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம்
ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என புகழ்ந்து தள்ளியுள்ளார் சக தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்.
அசத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின்
அஸ்வின், வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 113 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் 8வது விக்கெட்டிற்கு குல்தீப் யாதவுடன் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் அஸ்வின்.
இதன் மூலம் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். அதன்படி பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் கலக்கி வருகிறார் அஸ்வின்.
timesofindia
கிரிக்கெட் விஞ்ஞானி
அஸ்வின் குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், அவர் அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்கள் விளாசியுள்ளார்.
அஸ்வின் போல் கீழ்நிலையில் உள்ள வீரர்கள் ரன்கள் சேர்க்கும் போது எதிரணியினருக்கு கோபத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தும். பேட்டிங்கில் உழைக்கக் கூடியவர். பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எதிரணி வீரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார்.
இப்போதும் சென்னையில் இருந்தால் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். என்னை பொறுத்தவரை, அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி என கூறினார்.