ஸ்டெம்பை தெறிக்கவிட்ட பந்து! கிளீன் போல்ட் ஆன தினேஷ் கார்த்திக் வீடியோ
கிரிக்கெட் பயிற்சியின் போது தினேஷ் கார்த்திக் க்ளீன் போல்ட் ஆகி அவுட்டான வீடியோ வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் அக்டோபர் 23ஆம் திகதி இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ஜஸ்பரீத் பும்ரா காயம் காரணமாக விலகிவிட்டதால், மாற்றாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் எப்படி செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்திய அணியுடன் இணைந்துகொண்ட முகமது ஷமி, பயிற்சியிலும் ஈடுபட்டார். அப்போது தினேஷ் கார்த்திக்கிற்கு பந்துவீசிய அவர், அவரை போல்ட் ஆக்கி அசத்தினார்.
தினேஷ் கார்த்திக் டேர்த் மேன் திசையில் பந்தை விரட்ட முற்பட்டபோதுதான், ஷமி யார்க்கர் வீசி போல்ட் ஆக்கினார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.