இறுதி ஓவரில் களம் கண்ட தினேஷ் கார்த்திக்! சிக்சர், பவுண்டரி விளாசி எதிரணியை கதறவிட்ட வீடியோ
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை இறுதிக்கட்டத்தில் வெற்றிக்கு அழைத்து சென்ற தினேஷ் கார்த்திக் வீடியோ வைரலாகியுள்ளது.
இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்ற நிலையில் இதிலும் தோற்றால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் இந்தியா விளையாடியது.
WHAT. A. FINISH! ? ?
— BCCI (@BCCI) September 23, 2022
WHAT. A. WIN! ? ?@DineshKarthik goes 6 & 4 as #TeamIndia beat Australia in the second #INDvAUS T20I. ? ?@mastercardindia | @StarSportsIndia
Scorecard ▶️ https://t.co/LyNJTtkxVv pic.twitter.com/j6icoGdPrn
ஆட்டத்தின் இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட, களத்தில் ரோகித் - தினேஷ் கார்த்திக் ஜோடி இருந்தனர்.
தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசிய தினேஷ் கார்த்திக், அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
இதையடுத்து தினேஷ் கார்த்திக் ஒரு தரமான பினிஷர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.