தினேஷ் கார்த்திக் வேண்டவே வேண்டாம்! பிரபல வீரர் சொன்ன கருத்து... கொந்தளித்த ரசிகர்கள்
டி20 உலகக் கோப்பை ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக் வேண்டாம் என கூறும் கம்பீர்.
தினேஷ் அல்லது பண்ட் ஆகியோரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு என்றால், பண்ட்-க்கு தான் தர வேண்டும் என கருத்து.
டி20 உலகக் கோப்பை ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கை சேர்க்கக்கூடாது என கவும் கம்பீர் பேசியுள்ளது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில் அதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி சொதப்பியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆடும் லெவனில் உள்ள குழப்பம் தான்.
உறுதியான பிளேயிங் லெவன் அணி இல்லாததற்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோர்தான். ஏனெனில் ஒரு இடத்திற்கு இரண்டு பேரும் போடுகின்றனர்.
இந்நிலையில் பண்ட்-க்கு ஆதரவாக கவுதம் கம்பீர் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஒரே அணியில் விளையாட வைக்க முடியாது. அப்படி நடந்தால் 6வது பவுலர் இன்றி இந்தியா விளையாட வேண்டியிருக்கும்.
ஒருவருக்கு தான் வாய்ப்பு என்றால், பண்ட்-க்கு தான் தர வேண்டும். ஏனென்றால் டாப் ஆர்டரில் விளையாட வேண்டிய தேவை இருந்தாலும் கூட தினேஷ் கார்த்திக் அதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பண்ட் ஓப்பனிங், மிடில் ஆர்டர், லோயர் ஆர்டர் என அனைத்து இடத்திலும் விளையாடுகிறார் என கூறினார்.
கம்பீரின் இந்த கருத்து ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பையில் முக்கிய போட்டியில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பிய பண்ட்டுக்கு ஏன் கம்பீர் அதரவளிக்கிறார் என சமூகவலைதளங்களில் விளாசியுள்ளனர்.