டி20 உலக கோப்பை அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா? கேப்டன் ரோகித் பதில்
இந்திய அணியில் இடம்பெறுவது தொடர்பில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இடையே தொடரும் போட்டி.
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக் ஆடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ரோகித் பதில்.
டி20 உலக கோப்பை அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2022 சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டியில் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அவர் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். போட்டிக்கு பின்னர் பேசிய ரோகித் சர்மா, அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்க உள்ளோம். அதற்கு தயாராகவே இருக்கிறோம்.
AFP
கோப்பைதான் எங்களது முதல் இலக்கு என தெரிவித்தார்.
பின்னர் நெறியாளர் ரோகித் சர்மாவிடம், ரிஷப் பந்த்தான் விளையாடுவாரா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரோஹித், இது குறித்து பயிற்சியின்போது முடிவு செய்வோம் என சட்டென பதிலளித்தார்.