டோனி விக்கெட்டுக்கு முன் வருணிடம் தமிழில் டிப்ஸ் கொடுத்த தினேஷ் கார்த்திக்! 3 பந்திலே அவுட்டாகிய தல
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்திக்கு தமிழில் டிப்ஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்று முன் தினம் நடந்த போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, இப்போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் அடிக்க, அதன் பின் ஆடிய சென்னை அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் டோனி, இந்த போட்டியிலும் வழக்கம் போல் ரசிகர்களை ஏமாற்றினார். நான்கு பந்துகள் சந்தித்த அவர் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் வருண் சக்ரவத்தி பந்து வீச்சில் கிளின் போல்டாகி வெளியேறினார்.
வருண்சக்ரவத்தி ஓவரில் தொடர்ந்து திணறி வரும் டோனி, இந்த முறையும் போல்டானாது கடும் விமர்சனத்திற்குள்ளானது, ஆனால் சென்னை அணி வெற்றி பெற்றதால், அது அந்தளவிற்கு பேசப்படவில்லை.
இந்நிலையில், இந்த விக்கெட்டுக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், தினேஷ் கார்த்தி, பந்து வீச தயாராக இருக்கும் வருண்சக்ரவர்த்தியிடம், மெதுவாதான் ஆடப்போறான், உன்னை அடிக்க போவதில்லை, பயம் இருக்கும் என்று பேசியுள்ளார்.