166 மில்லியன் ஆண்டுகள் பழமை…பிரித்தானியாவில் டைனோசர்களின் பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில்(Oxfordshire) டைனோசர்கள் புதைப்படிமங்கள் அடங்கிய மிகப்பெரிய பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைனோசர் புதைப்படிமங்கள்
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள குவாரியில் நடந்த அற்புதமான கண்டுபிடிப்பில் டைனோசர்கள் புதைப்படிமங்கள் வெளிப்படுத்தியுள்ளது.
டைனோசர்களின் வாழ்க்கை குறித்து முன்னெப்போதும் இல்லாத அளவு புரிந்து கொள்ள உதவும் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாதச்சுவடுகளின் தொடர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 தனித்தனி பாதச்சுவடுகளை கொண்ட இந்த கண்டுபிடிப்பு, சுண்ணாம்புக் கல் குவாரியில் "பழக்கத்திற்கு மாறான வீக்கங்களை" கவனித்த ஒரு குவாரி தொழிலாளி மூலம் வெளிப்பட்டுள்ளது.
இதில் ஐந்து வெவ்வேறு வகையான பாதச்சுவடுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |