சுவிஸ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்தில் அரியவகை நோய்த்தொற்று
வளர்ந்த நாடுகளில் அபூர்வமானது அல்லது ஒழிக்கப்பட்டுவிட்டது என கருதப்படும் நோய்த்தொற்று ஒன்று, சுவிஸ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அரியவகை நோய்த்தொற்று
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் Diphtheria Pertussis Tetanus vaccine என்னும் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படுவதால், டிப்தீரியா என்னும் தொண்டை அடைப்பான் நோய் அபூர்வமாகிவிட்டதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்திலுள்ள Embrach என்னுமிடத்தில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் ஒருவருக்கு டிப்தீரியா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் தொற்று உருவாகாமல் தடுக்கும் முயற்சியாக ஆன்டிபயாட்டிக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அந்த மையத்தில் தங்கியிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் பணிபுரிபவர்களில் யாரெல்லாம் இதுவரை தடுப்பூசி பெறவில்லையோ, அவர்களுக்கு தடுப்பூசியும் வழங்கப்பட்டுவருவதாக சூரிக் சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டவர் என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |