இராஜதந்திரிகள் வாக்கெடுப்புகளை கண்காணிக்க முடியாது: தேர்தல் ஆணையம்
அடுத்த வாரம் நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் போது, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்களின் இராஜதந்திரிகள், கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்க தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளூர் தூதரக ஊழியர்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள் எந்தவொரு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட முடியாது என்றும், தேர்தலை அவதானிக்க அனுமதிப்பது நாட்டின் கொள்கையல்ல என்றும் ஒரு மூத்த தேர்தல் அதிகாரி விளக்கினார்.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஈடுபட முடியாது என EC உடனான ஆரம்ப கலந்துரையாடலின் போது ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை நாட்டில் ஏற்கனவே பணியில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழுவுடன், இணைந்து கொள்வதற்காக மேலதிக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவொன்று நாளை இலங்கை வரவுள்ளது.
இதன்படி சுமார் 70 உறுப்பினர்களை இந்த பணியில் ஈடுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |