லண்டனில் போராட்டத்தில் குதித்த இலங்கைத் தமிழர்கள் ! பிரபல இயக்குனர் வெளியிட்ட வீடியோ
தமிழர்களுக்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நீக்க கோரி லண்டனில் உள்ள அமேசான் நிறுவனம் முன் இலங்கைத்தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் வீடியோவை இயக்குனர் சேரன் பகிர்ந்துள்ளார்.
ஆர்ப்பாட்ட வீடியோவுடன் சேரன் ட்விட்டரில் பதிவிட்டதாவது, லண்டனில் அமேசான் நிறுவனம் முன் நடந்த இலங்கைத்தமிழர்களின் ஆர்ப்பாட்டம்... இதுபோல் உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் அங்கே வசிக்கும் தமிழர்கள் தொடர் போராட்டமாக நடத்த இருக்கிறார்கள் அந்த நாட்டின் விதிகளுக்கு உட்பட்டு... என சேரன் குறிப்பிட்டுள்ளார்.
சேரன் வெளியிட்ட வீடியோவில் பேசும் பெண், ஜூன் 21 திங்கட்கிழமை, சமீபத்தில் அமேசான் பிரைம்-ல் வெளியான தி பேமிலி மேன் 2 இணையத்தொடருக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம்.
தி பேமிலி மேன் 2 இணையத்தொடரில் தமிழர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழர்கள் தீவிரவாதிகள் அல்ல, அவர்கள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள்.
ஆனால், தி பேமிலி மேன் 2 இணைத்தொடரில் தமிழர்கள் தீவிரவாதிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர்.
அமேசான் நிறுவனம் அதன் தளத்திலிருந்து உடனே இந்த இணையத்தொடரை நீக்க வேண்டும். இணையத்தொடரை நீக்க வலியுறுத்தி இன்று அமேசான் தலைமையகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இணைத்தொடரை நீக்குவது தொடர்பில் அமேசான் நிறுவனத்திடம் கடிதம் அளித்துள்ளோம்.
லண்டனில் அமேசான் நிறுவனம் முன் நடந்த இலங்கைத்தமிழர்களின் ஆர்ப்பாட்டம்... இதுபோல் உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் அங்கே வசிக்கும் தமிழர்கள் தொடர் போராட்டமாக நடத்த இருக்கிறார்கள் அந்த நாட்டின் விதுகளுக்கு உடபட்டு... pic.twitter.com/JU3NopCseB
— Cheran (@directorcheran) June 22, 2021
கடிதத்தை பெற்றுக்கொண்ட அமேசான் அதிகாரிகள், இதுகுறித்து உயர்அதிகாரிகளுடன் கலந்துரையாடி இரண்டு நாட்களுக்குள் முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு பிறகு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றால், மீண்டும் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்களிடம் தெரிவித்ததாக அப்பெண் கூறியுள்ளார்.