பிரான்சுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நேரடி படகுப் போக்குவரத்து
பிரான்சுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நேரடி படகுப் போக்குவரத்து துவக்கப்பட உள்ளது.
பிரான்சுக்கும் அயர்லாந்துக்கும் இடையில்...
அயர்லாந்து கப்பல் நிறுவனமான Hibernia Line என்னும் நிறுவனம், விரைவில் வட பிரான்சிலுள்ள Boulogne-sur-Mer என்னுமிடத்துக்கும் தென்மேற்கு அயர்லாந்திலுள்ள Cork என்னுமிடத்துக்கும் இடையே முதல் நேரடி படகுப் போக்குவரத்தைத் துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில், இரண்டு நாடுகளுக்கும் இடையில், வாரத்துக்கு ஆறு முறை பயணிக்கும் வகையில், இரண்டு படகுகள் விடப்பட இருப்பதாக Hibernia Line நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாலையில் படகு புறப்படும் நிலையில், தோராயமாக தன் இலக்கை அடைய அந்த படகுகளுக்கு 21.5 மணி நேரம் பிடிக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மே மாதம் 7ஆம் திகதியிலிருந்து பயணிகள் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
ஒரு கார் மற்றும் இரு பயணிகள் படகில் பயணிப்பதற்கான கட்டணம் சுமார் 500 யூரோக்கள் என்றும் Hibernia Line நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு படகில் 600க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் வசதி உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், எரிபொருள் விலைகள் அதிகரித்துவரும் நிலையிலும், தங்களுக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்கிறார் Hibernia Line நிறுவனரான Aidan Coffey.
நாங்கள் விமான எரிபொருளையோ, வீட்டை சூடாக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெயையோ பயன்படுத்தவில்லை. நாங்கள் வேறு வகையான எரிபொருளைப் பயன்படுத்துகிறோம். ஆகவே, எரிபொருள் பிரச்சினையால் எங்கள் படகுப் போக்குவரத்துக்குப் பிரச்சினை இருக்காது என்கிறார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |