சுவிட்சர்லாந்திலிருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை
சுவிட்சர்லாந்திலிருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுவிட்சர்லாந்திலிருந்து லண்டனுக்கு...
சுவிட்சர்லாந்திலிருந்து லண்டனுக்கு ரயிலில் பயணிக்கவேண்டுமானால், அது பிரான்ஸ் வழியாகத்தான் அமையவேண்டும்.

ஆகவே, சுவிட்சர்லாந்திலிருந்து லண்டனுக்கு ரயில் சேவை துவங்குவது தொடர்பில், சுவிஸ் ஃபெடரல் ரயில்வேக்கும் பிரான்ஸ் தேசிய ரயில்வேக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், இத்திட்டத்தின் கீழ், நுழைவு நடைமுறைகளைத் தயாரித்தல், தேவையான உள்கட்டமைப்பு மற்றும் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள், அத்துடன் பொருத்தமான ரயில்கள் மற்றும் ரயில் பாதைகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய சில தடைகளும் உள்ளதை மறுப்பதற்கில்லை.
ஆக, அந்த தடைகளையெல்லாம் கடந்து இந்த திட்டம் 2030களின் துவக்கத்தில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திட்டம் நிறைவேறுமானால், சுவிட்சர்லாந்தின் சூரிக்கிலிருந்து ஆறு மணி நேரத்தில் லண்டனைச் சென்றடையலாம்.
அதேபோல, ஜெனீவாவிலிருந்து ஐந்தரை மணி நேரத்திலும், Baselஇலிருந்து ஐந்து மணி நேரத்திலும் பயணிகள் லண்டனைச் சென்றடயமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |