மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா! முடிவுக்கு வந்த 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா தனது 18 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேது, நந்தா, பிதாமகன் தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இவர் இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு மதுரையில் திருமணம் நடந்தது. 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (5.3.2022) இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள் என கூறப்படுகின்றது.
இச்சம்பவம் திரையுலகினரை மற்றும் இவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திரைபிரபலங்கள் பலர் விவகாரத்தை அறிவித்து வருவது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.