அனைவருக்கும் நன்றி, விரைவில் உங்களை சந்திக்கிறேன்! இயக்குநர் பாரதிராஜா
பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
 
விரைவில் பூரண நலம் பெற்று அனைவரையும் நேரில் சந்திப்பதாக இயக்குநர் பாரதிராஜா தகவல் 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜா விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக கூறிய மருத்துவர்கள், அவருக்கு ஓய்வு தேவை என அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து தந்தையின் உடல்நிலை நன்றாக இருப்பதாக அவரது மகன் மனோஜ் தெரிவித்தார்.

தற்போது பாரதிராஜா வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர், 'மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        