இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்
நடிகர் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மனோஜ் பாரதிராஜா
மனோஜ் பாரதிராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் ஆவார்.
1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மஹால்' என்ற படத்தின் மூலம் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா.
அதன் பின்னர் சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், மகா நடிகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக கார்த்தியின் நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் நடித்திருந்தார்.
மாரடைப்பால் உயிரிழப்பு
2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் இன்று காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு நந்தனா என்ற பெண்ணுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளது.
மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |