தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடருக்கு பிரபல இயக்குனர் கடும் எதிர்ப்பு
‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடருக்கு பிரபல இயக்குனர் சேரன் எதிர்ப்பு தெரிவத்துள்ளார். சமீபத்தில் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரின் டிரைலர் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இத்தகைய இணையத்தொடருக்கு தமிழக அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து.
மேலும் இந்த தொடரை தடைசெய்யக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இருப்பினும், திட்டமிட்டபடி ஜூன் 4ம் திகதி ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் அமேசான் ஃபிரைமில் வெளியானது.
இந்நிலையில், தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி, அதனைத் தடுத்து நிறுத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை விடுத்தார்.
சீமானை தொடர்ந்து பிரபல இயக்குனர் சேரன் ‘தி பேமிலி மேன் 2’ இணைத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன்.
தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை. @SeemanOfficial @thirumaofficial @PrimeVideoIN https://t.co/dFvoi8qTwb
— Cheran (@directorcheran) June 5, 2021
இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை என தெரிவித்துள்ளார்.