யோவ்... ரசிகரின் பதிவுக்கு இயக்குனர் சேரன் பதில்
தவமாய் தவமிருந்து பட காட்சியை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்ட ரசிகனுக்கு பதிலளித்துள்ளார் இயக்குனர் சேரன்.
கடந்த 2005ம் ஆண்டு வெளியான தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண், சரண்யா, சேரன் நடித்திருந்தனர்.
மிக உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் பாடல்கள் மேலும் வலுசேர்க்கும், பலரும் தங்களது குடும்பத்துடன் மிக ஒன்றிணைத்து பார்க்ககூடிய படம் என்பதால் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கு உதாரணமாக ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
"யோவ்" இந்த உரிமை இந்த படம் கொடுத்தது.. அந்த படத்தின் உணர்வுகள் கொடுத்தது... நம் வாழ்க்கையை நம்மைப்போல ஒரு சகோதரன் பதிவு செய்திருக்கிறான் என்ற பெருமையில் சொன்ன வார்த்தை... இந்த உரிமையும், இந்த வார்த்தையும் எத்தனை இயக்குனருக்கு கிடைக்கும் .. கிடைத்திருக்கும்.. வணங்குகிறேன் மக்களே... இந்த அன்புதான் யாராலும் வாங்க முடியாத,கொடுக்க முடியாத ஆஸ்கார் .. எம்மி விருதுகள்... எம் மக்களை என்றும் போற்றுவேன்..
— Cheran Pandiyan (@CheranDirector) November 7, 2026
அதில், “யோவ் ஏன் யா இப்டி ஒரு படம் எடுத்த? என்னால முடியல அழுகையா வருது எங்க அப்பன் பட்ட தவிப்பு என் கண்ணுக்குள்ளயே இருக்கு.. அப்பா இல்ல சார் . உங்களுக்கு என் அன்பு நன்றி” என சேரனைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் சேரன், “ ‘யோவ்' இந்த உரிமை இந்த படம் கொடுத்தது.. அந்த படத்தின் உணர்வுகள் கொடுத்தது... நம் வாழ்க்கையை நம்மைப்போல ஒரு சகோதரன் பதிவு செய்திருக்கிறான் என்ற பெருமையில் சொன்ன வார்த்தை...
இந்த உரிமையும், இந்த வார்த்தையும் எத்தனை இயக்குநருக்கு கிடைக்கும் .. கிடைத்திருக்கும்.. வணங்குகிறேன் மக்களே... இந்த அன்புதான் யாராலும் வாங்க முடியாத, கொடுக்க முடியாத ஆஸ்கார் .. எம்மி விருதுகள்... எம் மக்களை என்றும் போற்றுவேன்..” எனப் பதிவிட்டுள்ளார்.